கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள்.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டர் தன்பெர்க் அவர்கள், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப் அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி, இது தொடர்பாக திஷா ரவியை போலீசார் கைது செய்தனர். டெல்லி நீதிமன்றம், அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், நேற்று திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததையடுத்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் கூறுகையில், விசாரணையின்போது திஷா, நிகிதா மற்றும் சாந்தனு மீது பழி சுமத்துகிறார் என்றும், வரும் 22ஆம் தேதி ஷாந்தனு மற்றும் நிஷாவை நேருக்கு நேர் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…