2019 -ம் ஆண்டிற்கான “டைம்” பத்திரிகையின் சிறந்த நபராக கிரேட்டா தேர்வு.!
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.
- இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுவீடன் நாட்டை சார்ந்த 16 வயது மதிப்புத்தாக்க சிறுமி கிரேட்டா தன்பர்க். இவர் சுற்றுச்சூழல் மீது கொண்ட மிகுந்த அக்கறை காரணமாக சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.
அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டின் போது தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த விருது 1927-ம் ஆண்டில் இருந்து டைம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் மிக குறைந்த வயது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் “டைம்” பத்திரிகையின் இந்த கவுரவத்தை #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக கூறினார்.