சந்தானம் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டெட்..!
சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டிக்கிலோனா’ இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக் கிறார்கள். இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையைல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது, மேலும் அண்மையில் இந்த ‘டிக்கிலோனா படத்திலிருந்து வெளிவந்த மூன்று லுக் போஸ்டர்களுக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது, இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தக்வல்கள் வெளியாகியுள்ளது.
Excited…. Trailer at 5pm today! pic.twitter.com/Vt6GeMBa8s
— Raja yuvan (@thisisysr) August 21, 2020