பெரும் சோகம்;பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி;450-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Default Image

வங்க தேசத்தின் தென்கிழக்கில் சிட்டகாங் பகுதி அருகே 40 கி.மீ தொலைவில் உள்ள சேமிப்புக் கிடங்ல் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வங்க தேசத்தின்,கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கன்டெய்னர் டிப்போவில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,இது தொடர்பான தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

அப்போது டிப்போவில் ஏற்பட்ட அடுத்தடுத்த கொள்கலன் வெடி விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை ஊழியர்கள் உட்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர் என கூறப்படுகிறது.

எனினும்,இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும்,இந்த சம்பவத்தின் போது தீயணைப்பு வீரர்கள்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும்,குறிப்பாக,தீ விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்களை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இந்த தீ விபத்து தொடர்பாக வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்:”30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தனியார் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட சில ரசாயனங்கள் இருந்ததாகவும்,கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர் என்றும் கூறினார்.மேலும்,தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை எனவும்,இது தொடர்பாக போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்