சுதந்திர போராட்ட வீரர்களுக்காக உருவாகும் பிரம்மாண்ட பாடல்..!இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..!

Default Image

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்காக மிக பெரிய முயற்சியில் பிரம்மாண்ட பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜி.வி.பிரகாஷ் இசையில், தமிழகர்களின் தியாகம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் பெருமைகளை உள்ளடக்கிய பாடல் உருவாகவுள்ளது. ஏ.ராஜசேகர் இயக்கும் இந்த பாடலை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுகிறார்.

மிகப்பெரிய அளவு உருவாகும் இந்த பாடல் இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் எடுக்கப்படவுள்ளது. அவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி ஆகும்.

இந்த பாடலில் இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கு கொள்கின்றனர். மேலும் இப்பாடல் இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படமாக்கப்பட உள்ளது.

இந்த பிரம்மாண்ட பாடலுக்காக உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ கேன்வாஸ் பெயின்டிங், கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் என்ற தலைப்பில் உருவாகிறது. இதை இந்தியாவின் தலைசிறந்த 75 ஓவியர்கள் வரைய உள்ளனர். இதன் முதல் போஸ்டர் செப்டம்பர் 5 வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட பாடலை அனைத்து திரையரங்கு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்