இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இந்த படம் குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தின் பூஜை இன்று மாலை அல்லது இரவு நடைபெறும் எனவும், படத்திற்கான படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இன்று பூஜை நடந்தால் அதற்கான புகைப்படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…