தலையில் அறுவை சிகிச்சையின்போது கூலாக உணவு தயாரித்த பாட்டி.. என்னடா இது!
இத்தாலியில் அறுவை சிகிச்சையின் பொது 60 வயது பாட்டி ஒருவர் கூலாக தனக்கு பிடித்த உணவை தயாரித்த சம்பவம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
தற்பொழுதுள்ள காலத்தில் அறுவை சிகிச்சை என்பது எளிதானதானது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை பலரும் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். என்னதான் எளிதானதாக இருந்தாலும் மருத்துவரின் கத்தியை பார்த்தல் ஒரு பயம் வரும். இந்நிலையில், அறுவை சிகிச்சையின் பொது 60 வயது மூதாட்டி ஒருவர் அறுவை சிகிச்சையின் பொது, தனக்கு பிடித்த உணவை கூலாக சமைத்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவம், இத்தாலியில் நடந்தது. அங்கு வசிக்கும் 60 வயது மூதாட்டிக்கு மூலையில் கட்டி ஏற்பட்டுள்ளது. அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர். மேலும், இந்த அறுவை சிகிச்சையின் பொது சிறிய தவறு நடந்தாலும் அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து கொண்டே சிகிச்சை மேற்கொள்வதற்காக நோயாளிகளை அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுமாறு மருத்துவர்கள் கூறுவார்கள்.
அந்தநிலையில், அறுவை சிகிச்சை நடக்கும் அதே நேரத்தில், அந்த பாட்டி தனக்கு பிடித்த இத்தாலியின் பிரபல உணவான அஸ்கோலி ஆலிவ்களை தயாரித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் சுமார் 90 அஸ்கோலி ஆலிவ்களை அவர் தயாரித்துள்ளார். இந்த புகைப்படம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அனைவரையும் வியப்படைய வைத்தது.
மேலும், மருத்துவர்கள் தலையை பிளந்து, அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், மூதாட்டி உணவுகளை தயார் செய்து கொண்ட மூதாட்டியின் மன உறுதியை பலரும் பாராட்டியுள்ளனர்.