கிராமத்துக் கதையில் அருள்நிதி.! இயக்குனர் யார் தெரியுமா..?
அருள் நிதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாமாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள் நிதி. தற்போது யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் “D பிளாக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருள் நிதி ராட்சசி படத்தை இயக்கிய கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிக்ககவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க மண்வாசம் வீசும் கிராமத்துக் கதை எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.