” மக்களுக்கான திட்டங்களை ஆளுநர் தடுக்கின்றார் ” நாராயணசாமி ஆவேசம்…!!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அவர்கூறுகையில் , ஹெல்மட் கட்டாயம் என்ற பெயரில் விதிமீறி செயல்படும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனை , தொழிலாளர்கள் பிரச்சினை , பொது மக்களின் சமூக நலத் திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார. இவரின் இந்த போக்கு துணைநிலை ஆளுநருக்கு அழகல்ல என்று விமர்சனம் செய்துள்ளார்.