இலங்கை அமைச்சரவை இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு covax தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளது. நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி அங்கீகாரம் இதற்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இலங்கை அரசு தடுப்பூசி பெற தகுதி உடையதாக அமைந்துள்ளது.
இலங்கை அமைச்சரவை இந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடும். இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தடுப்பூசி பெற நாட்டிற்கு உதவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் கையெழுத்திடுவது ஜனவரி 8-ம் தேதிக்குள் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை தேர்வு செய்வதாக இலங்கை அரசாங்கம் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் தொடக்கத்திலிருந்து இலங்கையில் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அக்டோபர் வரை வெறும் 13 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, இப்போது 200 தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 240-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…