ஹாங்காங் சென்று ஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 3,700 பயணிகள் இருக்கிறார்கள். அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானது அதிர்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து அந்த கப்பலில் 355 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்த நிலையில், மேலும் 99 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கப்பல் யோகோஹாமா பகுதியில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. குறிப்பாக இலவச ஐபோன்களை வழங்குவதற்கு நோக்கம் என்னவென்றால், சிக்கித் தவிக்கும் பயணிகளை மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இந்த ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர்.
கராச்சி : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார்.…
சென்னை: தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின்…
அமெரிக்கா: ஹாலிவுட் திரையுலகில் 'ஓப்பன்ஹெய்மர்' உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அடுத்ததாக ஹோமரின் காவியக்…
டெல்லி : சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில்,…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில்,…