170 காட்டு யானைகளை ஏலமிட திட்டமிட்ட ஆப்பிரிக்கா நாட்டு அரசு!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 170 யானைகளை ஏலமிட ஆப்பிரிக்கா அரசு திட்டம்.
ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான நமீபியாவில், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் இடையிலான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை, ஆப்பிரிக்க நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானாலும் யானைகளை ஏலத்துக்கு எடுக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ள என்னவென்றால், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் யானைகள் வைக்கப்படும் சொத்துக்கான, விளையாட்டு ஆதார வேலி சான்றிதழ் ஆகியவை அடங்கும் என்றும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் யானைகளை வாங்க விரும்பினால், தங்கள் நாடுகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டுமென்றும், அவ்வாறு வழங்கும் பட்சத்தில், எடுத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025