300 ஆண்டு கழித்து குடமுழுக்கு கண்ட வேணுகோபால சுவாமி..சிறப்பாக நடைபெற்றது..!

Default Image

300 ஆண்டுகள் கழித்து ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில்க்கு கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக  நடைபெற்றது.

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் அருள்பாலித்து வரும் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

மதனாஞ்சேரி கிராமத்தில் 300 ஆண்டு காலமாக மிகத்தொன்மை வாய்ந்த இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊா் மக்கள் முடிவு செய்தனா். அதன்படி புனரமைப்பு  பணிக்காக சுமாா் ரூ. 3 கோடி செலவில்பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்பணிகள் எல்லாம் முடிந்த நிலையில் வேணுகோபால சுவாமி கோயிலில்க்கு மகா கும்பாபிஷேக விழாவனது கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் மங்கல இசையோடு தொடங்கியது.

இதனைத்தொடா்ந்து முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி எனப் பல பூஜைகளும் சிறப்பு யாகங்களும் 4 நாட்களாக நடைபெற்று வந்தன.நேற்று அதிகாலை 4 மணியளவில் கணபதிபூஜை மற்றும் சுமங்கலி பூஜை அதனோடு 108 சங்காபிஷேகம் , கும்பஸ்தான பூஜை வெகுச்சிறப்பாக. சரியாக காலை 5 மணியளவில் கலச நீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனால் அக்கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுத்தி உள்ள அனைவரும் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்