80 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “வாத்தி கம்மிங்” வீடியோ பாடல்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு பாடல்கள் மற்றும் படத்தில் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருந்தது.
இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.