இன்று வெளியாகும் “வாத்தி ரெய்டு” வீடியோ பாடல்…!
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு வீடியோ பாடலை இன்று படக்குழுவினர் 6 மணிக்கு வெளியீடுகிறார்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. உலகளவில் தற்போது வரை 248 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்துள்ளார்கள். மேலும் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Our #VaathiSwag! ????
Witness the electrifying #VaathiRaidVideoSong at 6️⃣PM today! ????@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @XBFilmCreators @Lalit_SevenScr @7screenstudio #Master #VaathiRaid pic.twitter.com/d52FTW1pDw
— Sony Music South (@SonyMusicSouth) February 16, 2021