இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 75,000 கோடி முதலீடு கூகுள் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் தலைமை இயக்குனர் சுந்தர்பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார். இந்த உரைக்கு பின்னர், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், இன்று காலை சுந்தர் பிச்சையுடன் உரையாடினேன்.
நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். அதிலும், குறிப்பாக நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.
மேலும், டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன் என மோடி பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…