வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. கூகுளின் புதிய செயலி மூலம் இனி எளிதாக பணம் சம்பாதிக்கலாம்!
கூகுளின் புதிய “டாஸ்க் மேட்” என்ற செயலியின் மூலம் சிறிய பணிகளை மேற்கொண்டு எளிதாக பணம் சம்பாதிக்கலாம். அந்த செயலியை பரிசோதித்து வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் பலர், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். அந்த கவலையை போக்க கூகுள் நிர்வாகம், புதிதாய் “டாஸ்க் மேட்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பயனர்கள், அந்த செயலியில் கூறப்படும் எளிய பணிகளை மேற்கொண்டால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பீட்டா வெர்சன் மட்டுமே இந்தியாவில் இருப்பதாகவும், அதன் ரெபரல் கொட் (Referal code) இருந்தால் மட்டுமே இதனை உபயோகிக்க முடியும்.
இந்த கூகுள் டாஸ்க் மேட் செயலியில் பயனர்களுக்கு சில செயலிகளை செய்யுமாறு கூறும். அந்த பணிகளை இரண்டு வகையாக வழங்கும். அது,
- இருந்த இடத்திலே இருந்து பணி செய்வது,
- மேப்பில் காட்டும் இடத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்வது.
இருந்த இடத்திலே இருந்து பணி செய்வது:
இந்த செயலி மூலம் நாம் இருக்கும் இடத்திலே இருந்தும் பணம் சம்பாதிக்கலாம். அதற்கேற்ற பணிகள் கொடுக்கப்படும். அதாவது, ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகளை உள்ளூர் மொழிக்கு மொழி பெயர்த்து வழங்குவது, ஒருவருக்கு தொலைபேசி மூலம் பேசுவது, உள்ளிட்ட எளிதான பணிகள் இருக்கும் என கூறப்படுகிறது.
மேப்பில் காட்டும் இடத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்வது:
அதேபோல, மேப்பில் காட்டும் இடங்களுக்கு வெளியே சென்று சென்று பணியினை மேற்கொள்வது எப்படியென்றால், கடைகளை புகைப்படம் எடுத்து அப்லோட் செய்வது, உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இந்த செயலி மூலம் நாம் சம்பாதிக்கும் பணம், நமது நாட்டின் பணமாக வழங்கப்படும் எனவும், தற்பொழுது இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்த செயலி வெளியிடப்படும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.