6000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கிய 'கூகுள்' சுந்தர் பிச்சை.! கொரோனா நிவாரண நடவடிக்கை தீவிரம்!
கொரோனா வைரஸ் தொற்று உலகமக்களை அச்சுறுத்தி வருகிறது. பலவேறு நாடுகள் தீவிரமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர்.
உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 10 லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தங்களது நிறுவனத்தின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 6085 கோடி) கொரோனா நிவாரண உதவியாக செய்ய உள்ளனராம். இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பான WHO, பிற சுகாதார நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் உதவ உள்ளதாக தெரிவித்துள்ளனர்.