கூகுள் CEO பிறந்தாநாளில் குழப்பம் ஏற்படுத்திய கூகுள் தேடுதளம்…குழப்பத்தில் பயனர்கள்!
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிறந்த நாளை ஜூலை 12 என கூகுள் தவறாகக் காட்டியதாக புகார்..
கூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்தது என பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
சுந்தர் பிச்சை என்பவர் கூகுள் மற்றும் பாரண்ட் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் இவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இவர் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுந்தர் பிச்சை இன்று ஜூன் 10 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆனால் இதில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் இன்று ட்விட்டரில் இருந்திருந்தால், இந்த சிறப்பு நாளில் உலகெங்கிலும் அவரை விரும்புபவர்களால் அவர் பெற்ற ஏராளமான வாழ்த்து ட்வீட்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.
இருப்பினும், ட்விட்டரில் சிலர் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரியின் பிறந்த தேதி குறித்த குழப்பத்தையும் பகிர்ந்துள்ளனர்.
ஏனெனில் சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்துள்ளது, அதில் அவரது பிறந்த நாள் தேதியை ஜூன் 10 எனக் காண்பிப்பதற்கு பதிலாக, அது ஜூலை 12 என தேதியைக் காட்டியுள்ளது.
இதுவே குழப்பத்தைப் பற்றி பதில்களைப் பகிர்ந்து கொள்ள மக்களைத் தூண்டியுள்ளது.
Now according to #Google, Sir's birthday is on 12th July.
Yaar google bhi na!!! #SundarPichai pic.twitter.com/JtoejXKuy4— Debanshi Biswas (@BiswasDebanshi) June 10, 2021