ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூகுள்!
உலகளவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரம்தோறும் இலவசமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
உலகளவில் கொரோனா பரவளின் இரண்டாம் அலை வெடித்துள்ள நிலையில், பிரிட்டன் உட்பட பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், ஃபைசர் தடுப்பூசி அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கூகுள், உலகளவில் இருக்கும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் வாரம்தோறும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 90,000 அமெரிக்க ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக இந்த கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் பாதுகாப்பை இருப்பார்கள் எனவும், வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களும் வார-வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.