ஆப் ஸ்டோரில் இருந்து “கூகுள் பே” செயலி தற்காலிகமாக நீக்கம்!

Default Image

கூகுள் பே செயலியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், ஆப் ஸ்டாரில் இருந்து கூகுள் பே செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உள்ளிட்ட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம்.

இந்த கூகுள் பே செயலி, இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டார் பயனர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் விளக்கமளித்தார். அதில் அவர், iOS பயனர்கள் சிலர், கூகுள் பே செயலியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்கள் குழு விரைவாக சரிசெய்யும் என தெரிவித்தனர். இந்த சிரமத்திற்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்