வாரம் தோறும் 90,000 வேலையாட்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்ய முன்வந்துள்ள கூகுள் நிறுவனம்!

தனது நிறுவனத்தின் கீழ் பணியாற்ற கூடிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இலவசமாக வாரம் ஒருமறை பரிசோதனை செய்து கொள்வதற்கான கட்டத்தை ஏற்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வந்தாலும், தற்பொழுது பல இடங்களில் இதன் வீரியம் குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் மொத்தமாக பணியாற்றக்கூடிய ஊழியர்களின் நடுவில் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதால் பல்வேறு இடங்களில் அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் கீழ் அமெரிக்காவில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் இலவச கொரோனா பரிசோதனைக்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்ததை அடுத்து, தங்களது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை வீட்டில் வைத்தே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த குழுவினர் வாரம் ஒருமுறை இலவசமாக பறிபோதனையை செய்து கொள்ளலாம் எனவும், பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு நாட்களில் அறிக்கைகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தினமும் பரிசோதனை மேற்கள்வதற்கு 50 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 3,700 ரூபாய் செலவாகும். இவ்வாறு வாரம் வாரம் 90 ஆயிரம் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டால் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் வாரந்தோறும் செலவாகும். இருந்தாலும் தனது ஊழியர்களுக்காக கூகுள் நிறுவனம் இலவச சோதனையை கொடுத்துள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் இதுபோன்ற ஒரு சலுகையை வழங்க முன்வரவில்லை. களத்தில் பணிபுரியக்கூடிய தங்கள் ஊழியர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள கூகுள் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் ஊழியர்களில் அறிகுறி அற்றவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்க இது உதவும் எனவும் நம்பப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025