தொடரும் போர் பதற்றம் – 3.68 லட்சம் உக்ரைனியர்கள் தஞ்சம்..! – ஐ.நா

ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலாந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த போரில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து போர் பதற்றம் தொடர்வதால் உக்ரைனில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறி செல்கின்றனர். இதுகுறித்து ஐ.நா கூறுகையில், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலாந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.