397 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம்.. டூடுலை மாற்றிய கூகுள்!

Default Image

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில் இன்று வானில் நிகழும் அற்புதம் காரணமாக தனது டூடுலை மாற்றியுள்ளது.

397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரவு வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று மாலை ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. பொதுவாக இரு கோள்களுக்கு இடையிலான ஒருங்கமைவு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியதாகும். ஆனால் இன்று வரக்கூடிய இந்த அறிய நிகழ்வு, கடந்த 1623 ஆம் ஆண்டில் நடந்தாக. இது 397 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு கோள்களும் ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கி.மீ. இருக்கும்என ஆய்வாளர்கள் கூறினார்கள். இன்று மாலை 5.45 மணிக்கு மேல் மேற்கு வானத்தில் அவற்றிற்கு இடைப்பட்ட கோணத்தில் 1 டிகிரியில் 10ல் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால், அவைகள் ஒரே கோளாக காட்சியளிக்கவுள்ளது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் (Jupiter) கோள் பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சனி (Saturn) கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிகழ்வினை நாம் வெறும் கண்களால் காணலாம் எனவும், இதனால் நம் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில் இன்று வானில் நிகழும் அற்புதம் காரணமாக கூகுள், தனது டூடுலை மாற்றியுள்ளது. அதில் இன்று வானில் ஒன்றாக காட்சியளிக்கும் வியாழன் மற்றும் சனி கோள்கள் இரண்டும் கடந்து செல்லுமாறு அந்த டூடுல் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்