இனி டாக்டர்களின் புரியாத கையெழுத்தும் புரிந்துவிடும்.! கூகுளின் அசத்தல் சம்பவம்.!
மருத்துவர்களின் புரியாத கையெழுத்தை , ஸ்கேன் செய்து மருத்துவ குறிப்புகளை பார்த்துக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் பிரபல மென்பொருள் தேடல் நிறுவனமான கூகுள் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி, தற்போது புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவர்களின் கையெழுத்து என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். அகில் என்ன எழுதியுள்ளார்கள் என்பதே தெரியாமல் மருந்து கடைக்காரரிடம் கொடுத்து இருப்போம். அவர்கள் அதனை பார்த்து மருந்துகள் கொடுப்பார்கள். இருந்தும் சில சமயம் அது சரியானதா என நமக்கு சந்தேகம் வந்துவிடும்.
அதனை தீர்க்க தற்போது கூகுள், தனது கூகுள் லென்ஸ் (புகைப்படத்தை ஸ்கேன் செய்யும் வசதி) வசதியில் மருத்துவர்கள் கையெழுத்தை புரிந்து கொள்ளும் வசதியை உள்ளீடு செய்துள்ளது. இந்த வசதி மூலம் மருத்துவர்களின் கையெழுத்தை ஸ்கேன் செய்து அதில் உள்ள மருந்துகளை சரிபார்த்து கொள்ளலாம்.
ஆனால், இதனை 100 சதவீதம் உண்மை என்றோ, இதனை ஆதாரமாக காட்டவோ கூகுள் மறுத்துவிட்டது. இதனை பயனர்கள் சரிபார்த்தலுக்காக உபயோகிப்படுத்திக்கொள்ளாம் என கூறப்பட்டுள்ளது.