2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையைக் கணிக்க உதவும் கூகுள் டீப்-மைண்ட் அசத்தலான கண்டுபிடிப்பு..!

Default Image

2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையை கண்காணித்து கூறும் AI- அடிப்படையிலான ‘நவ் காஸ்டிங்’ அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளது.

பொதுவாக கோடைக்காலத்தை விட மழைக்காலங்களில்,காய்ச்சல், ஜலதோஷம்,சளி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உண்டு.அவ்வாறு இருக்க சில நேரங்களில் வானிலை முன்னறிவிப்புகள் கூட மழைக்கான வாய்ப்புகளைக் கணிப்பதில் சிறிது பின்தங்கி விடுகிறது.இதனால்,மழைக்கலங்களில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கனமழைகளில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில்,கூகுளுக்குச் சொந்தமான லண்டன் ஆய்வகமான டீப் மைண்டின் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு கணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.இதன்மூலம்,அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் சாத்தியக்கூறு இருந்தால் தற்போதுள்ள அமைப்புகளை விட துஇந்த ஆய்வு இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/weather-forecat-with-artificial-intelligence-434789.htmlல்லியமாக கூற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயற்கை நுண்ணறிவு AI- அடிப்படையிலான “நவ் காஸ்டிங்” அமைப்பை உருவாக்க, டீப் மைண்டில் உள்ள விஞ்ஞானிகள் வானிலை அலுவலகத்தில் (UK யின் தேசிய வானிலை சேவை) 24/7 செயல்பாட்டு மையத்தில் பணிபுரியும் வானிலை ஆய்வாளர்களுடன் கூட்டு சேர்ந்தனர்.

இதனையடுத்து,இங்கிலாந்தில் தற்போது ஒளிபரப்பும் மாடல்களைப் பயிற்றுவிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும், இந்த அமைப்பானது ஜனவரி 1, 2016 மற்றும் டிசம்பர் 31 க்கு இடையில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் சேகரிக்கப்பட்ட ரேடார் கலவைகளைப் பயன்படுத்தியது. இதன்காரணமாக,இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக மழைக் குறித்த மேம்பட்ட முன்னறிவிப்பினை வழங்கியது.

குறிப்பாக,இந்த நவ் காஸ்டிங் தொழில்நுட்பம் உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் தரவைப் பயன்படுத்தி, அடுத்த 20 நிமிடங்களின் தரவின் அடிப்படையில் அடுத்த 90 நிமிடங்களில் நடுத்தர முதல் கனமழைக்கான நிகழ்தகவு கணிப்புகளை துல்லியமாக கணிப்பதாகவும்,இந்த ஆய்வு இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்