கூடுதல் பாதுகாப்பு!நவம்பர் 9 முதல் கூகுள் மாற்றும் முக்கிய அம்சம்!விவரம் இங்கே!
நவம்பர் 9 முதல்,அனைத்து கூகுள் கணக்குகளிலும் இரண்டு-படி சரிபார்ப்பு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்,பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமான கூகுள்,தனது இயங்குதளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது, இது வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.நவம்பர் 9 முதல்,கூகுள் கணக்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெறும்.இதன்மூலம் ,உங்கள் கணக்கிற்கான ஒரே கிளிக்கில்(one-click login )உள்நுழையும் அம்சத்திற்கு கூகுள் விரைவில் முற்றுபுள்ளி வைக்கவுள்ளது. இருப்பினும்,உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கான புதிய வழியை நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.அந்த வகையில்,கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இரண்டு-படி சரிபார்ப்பு (2எஸ்வி) செயல்முறைக்கு செல்ல வேண்டும். இந்த புதிய உள்நுழைவு முறை உங்கள் கூகுள் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்,கடந்த மாதம் கூகுள் நிறுவனம் கூறியதாவது:“பல ஆண்டுகளாக, கணக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கான நம்பகமான வழிகளில் ஒன்றான இரண்டு-படி சரிபார்ப்பின் (2SV) புதுமைகளில் கூகுள் முன்னணியில் உள்ளது. 2SV ஆனது உங்களுக்குத் தெரிந்த ஒன்று, (கடவுச்சொல் போன்றது) மற்றும் “உங்களிடம் உள்ள ஒன்று” (உங்கள் ஃபோன் அல்லது பாதுகாப்பு விசை போன்றவை) இரண்டையும் இணைக்கும் போது வலிமையானது” என்று தெரிவித்துள்ளது.
கூகுள் அக்கவுண்ட் அப்டேட்டை எப்படிப் பெறுவது என்பது இங்கே:
- உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய 2SV தானாகப் பதிவு செய்யப்பட்டவுடன், முதலில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும். உரை(text), குரல் அழைப்பு அல்லது கூகுளின் மொபைல் ஆப்ஸ் வழியாக OTP (ஒருமுறை-கடவுச்சொல்) அனுப்பப்படும்.
- OTP ஐப் பெற்ற பிறகு, நீங்கள் உள்நுழைவு பட்டியில் குறியீட்டை(login bar) வழங்க வேண்டும்.
- பலர் ஏற்கனவே தங்கள் கூகுள் கணக்குகளில் முதன்முறையாக உள்நுழையும் போது அல்லது புதிய சாதனத்தைப் பயன்படுத்தி உள்நுழையும் போது ஏற்கனவே 2SV ஐப் பயன்படுத்தி உள்ளனர். நவம்பர் 9 முதல், அனைத்து கூகுள் கணக்குகளிலும் இந்த செயல்முறை செயல்படுத்தப்படும் மற்றும் பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இரண்டு-படி சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்த வேண்டும்.
2SV என்றால் என்ன?
இரண்டு-படி சரிபார்ப்பு என்பது ஹேக்கர்களிடமிருந்து சாத்தியமான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளடக்கிய இந்த செயல்முறையில், உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் உங்கள் தகவலை அணுக முடியாது என்பதை உறுதி செய்யும். யாராவது உங்கள் கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், உள்நுழையும்போது உங்கள் கணக்கை அணுக உங்கள் மொபைலில் அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.