6 வழிமுறைகளில் கைகளை கழுவ வேண்டும்.. விளக்குகிறது கூகிள் டூடுல்.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு முக்கிய தினத்தன்று கூகுள் நிறுவனம், தனது டூடுலை மாற்றிவரும். அதேபோலவே, இன்றும் தங்களின் டூடுலை மாற்றியுள்ளது. அதாவது ஒருவரின் கைகளைக் கழுவுவதற்கான நடைமுறையை முதன்முதலில் 1847 ஆம் ஆண்டில் ஜெர்மன்-ஹங்கேரிய மருத்துவரும், விஞ்ஞானியுமான டாக்டர் இக்னாஸ் செம்மல்வீஸ் கைகழுவும் வழிமுறையை கண்டறிந்து, உலக மக்களிடையே விளக்கினார்.
அந்த வகையில் நோய் பரவாமல் தடுக்க உங்கள் கைகளைக் நன்றாக கழுவதே சரியான வழி என நிரூபிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், தனது டூடுலில் இக்னாஸ் செம்மல்வீஸ் மற்றும் கைகழுவது குறித்த 6 வழிமுறைகளை அனிமேஷன் விடியோவாக டூடுலில் பதிவிட்டுருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025