சிறந்த செய்திகளுக்கு பணம் செலுத்தும் கூகுள் நிறுவனம்.!
தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி ஊடகங்களுக்கு கூகுள் பணம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் செய்தி மற்றும் டிஸ்கவர் சேவைகளில் வெளிவரும் தரமான செய்திகளுக்கு பணம் செலுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வரும் புதிய திட்டம் அனுபவத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வெளியீட்டாளர்களுடன் இந்தத் திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியது. அது விரைவில் வரவுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்திகள் கூகிளின் செய்தி மற்றும் டிஸ்கவர் சேவைகளில் கிடைக்கும். பயனர்கள் பணம் செலுத்தி செய்திகளை படிக்கும் நபர்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக செய்தி வெளியீட்டாளர்களின் விளம்பர வருவாயில் வீழ்ச்சியை சந்தித்துள்ளார்கள்.
இந்தத் திட்டம் பங்கேற்கும் ஊடங்களுக்கு தங்களது செய்திகள் மேம்பட்ட அனுபவத்தின் மூலம் பணமாக்க உதவுகிறது. இதற்கிடையில் இதுபோன்ற திட்டங்கள் சில வெளியீட்டாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளன .