இவ்வுலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது!
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, உலகம், அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஸ்டீபனின் இந்த திடீர் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், “இவ்வுலகம் அழகிய எண்ணம் கொண்ட அறிவுப்பூர்வமான விஞ்ஞானியை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.