கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்த செயலிக்கு எதிர்மறையாக விமர்சனம் செய்தோரில், ஒரே நாளில் 16,00,000 விமர்சனங்கள் நீக்கியுள்ளது.
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வரும் ஒரே ஹாஷ்டேக் #Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia. இதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக பல ஹாஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த ஒரு வாரமாக, யூடுப் மற்றும் டிக்டாக்கில் பரவிய சமூக விரோத விடீயோக்கள்.
அதில் தொடக்கமாக அமைந்தது, டிக்டாக்கில் பிரபலமான பைசல் சித்திகின் விடியோதான். சமீபத்தில் இவர் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் அவர் ஒரு பெண்ணின் மீது “ஆசிட் தாக்குதல்” நடத்துவது போல ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ கூறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், டிக்டாக்கிலிருந்து அவர் அந்த விடியோவை நீக்கினார். ஆனால் அவர் செய்த இந்த செயல், உலகம் முழுவதும் வைரலானது. அது மட்டுமின்றி, அதே போல பல மோசமான விடீயோக்களை பலர் பதிவு செய்து வந்ததால், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து, ஹாஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலியை 1 பில்லியன் (100 கோடி) மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலுக்கு முன், டிக்டாக் செயலியின் மதிப்பு 4.6 ஆக இருந்த நிலையில், பலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டதால், அதன் மதிப்பு 1.2 ஆக சரிந்தது.
இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவளித்து வருகின்றது. பிளே ஸ்டாரில் எந்த ஒரு செயலியின் மதிப்பு 1 ஸ்டாராக குறைந்தால், அந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கிவிடும். இந்நிலையில், கூகுள் நிறுவனம், ஒரே நாளில் 16,00,000 மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை நீக்கியுள்ளதால், 1.6 ஆக உயர காரணம் என கூறப்படுகிறது. ஆனாலும் பல தரப்பினர், டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் எனும் நோக்குடன் அந்த செயலுக்கு 1 ஸ்டார் மட்டுமே அளித்து எதிர்மரையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…