மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி : கொரோனா முடிவுக்கு வருகிறதா..? – ஹாமிஸ் மெக்கல்லம்
இது கொரோனா வைரஸின் முடிவு காலமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர் ஹாமிஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கருத்தரங்கில் பேசிய பிரபல வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல், இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், பெரும்பாலான இந்தியர்கள் உடலில் எதிர்ப்பாற்றல் உள்ளது. அண்மையில், நடத்தப்பட்ட ஆய்வில் 67% இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்ப்பாற்றல் உள்ளவர்களை ஓமைக்ரான் போன்ற புதிய வகை கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஓமைக்ரான் வைரசுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகளை பாதுகாப்பு தரும் என்று தெரிவித்துள்ளார்.
ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், அது மெலிதான பாதுப்புகளையே ஏற்படுத்தும் என ஆஸ்திரேலியாவின் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹாமிஸ் தெரிவித்துள்ள நிலையில், இது கொரோனா வைரஸின் முடிவு காலமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.