சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! மாநாடு படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சிம்பு.!
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21-ம் தேதி காலை 10.44 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் .மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பை கவனிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பொறுப்பை தயாரிப்பாளர் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவரே கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று மாநாடு படத்திலிருந்து புது அறிவிப்பு ஒன்றை நாளை காலை 09.09 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21-ம் தேதி காலை 10.44 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . தீபாவளிக்கு மாநாடு படத்தின் அப்டேட் வரலானாலும் லேட்டா வந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளனர் .
First look on 21 nov 2020 @ 10:44am@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt @UmeshJKumar @vasukibhaskar@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/LRIMQrO5F7
— Silambarasan TR (@SilambarasanTR_) November 19, 2020