விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 10வது தவணை நிதியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி.!
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி.
விவசாயி குடும்பங்களுக்கு ஆதரவாக கடந்த 2018 டிசம்பரில் பிரதான் மந்திரி கிசான் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், வரும் ஒவ்வொரு விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கபடுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பல விவசாயிகளுக்கு இம்முறை ஒதுக்கப்பட்ட தவணையில் ரூ.2,000 பணத்திற்கு பதிலாக ரூ.4,000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சில விவசாயிகளுக்கு ஒன்பதாவது மற்றும் 10வது தவணைகள் ஒன்றாக இணைத்து வழங்கப்படும் மத்திய அரசு கூறியுள்ளது. PM KISAN திட்டத்திற்காக இதுவரை 43,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார். 2022-அம ஆண்டு ஜன. 1ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி வாயிலாக தவணை நிதி ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவிக்கிறார் என்று கூறப்படுகிறது.