நல்லா தெரிஞ்சிக்கோங்க நண்பா! காலை உணவு சாப்பிடுவதின் அவசியம்!
- காலை உணவின் அவசியம்.
- காலை உணவை உட்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்.
இன்றைய நாகரீகமான உலகில், ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகளை முடித்து, பின் அலுவலகத்திற்கு செல்வதே இன்றைய பெண்களின் பெரிய வேலையாக உள்ளது. அதனால் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. தற்போது இந்த பதிவில் காலை உணவு சாப்பிடுவதில் அவசியம் குறித்து பார்ப்போம்.
காலை உணவு ஏன் அவசியம் சாப்பிட வேண்டுமென்றால், இரவு உணவிற்கும், காலை உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இதனால் தான் இதனை பிரேக் பாஸ்ட் என்று சொல்கிறோம். இதனை தமிழில் விரதத்தை உடைப்பது என்று சொல்கிறோம்.
நாம் நமது அன்றாட வேலைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதுபோல நமது உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு குடற்புண் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதேபோல், காலை உணவை சாப்பிட்டு விட்டு, வேலைக்கோ அல்லாது பள்ளிக்கோ செல்பவர்கள், அந்த நாள் முழுவதும், தங்களது வேளைகளில் சுறுசுறுப்பாகவும், உட்சாகமாகவும் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே காலை உணவின் அவசியம் அறிந்து, உணவை தவிர்க்காமல், தினமும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.