ஒவ்வொரு பூக்களுமே பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.
இயக்குனர் சேரன் இவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்த பாடலில் மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் பாடி நடித்திருந்தார். இந்த பாடலை தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதில் ” வார்த்தைகள் இல்லை. மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…