ஒரே நாளில் உயர்ந்தது தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 57 ரூபாய் விலை உயர்ந்து 3ஆயிரத்து 327 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு சவரன் தங்க நகை 26,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 41.30 காசுக்கு விற்பனையாகிறது. தங்க விலையில் ஏற்பட்டு உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.