நாளுக்குநாள் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 27,680-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வால், புதிதாக நகை வாங்குவோர் மற்றும் திருமணத்திற்காக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.