மீண்டும் அதிரடி உயர்வை கண்ட தங்கம் விலை!
பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்ற ஒரு பொருள் என்னவென்றால் அது நகைகள் தான். அந்த வகையில், கடந்த மாதங்களாகவே தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை தாகத்தின் விலை சவரனுக்கு ரூ.496 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.26.976-க்கு விற்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 அதிகரித்து, 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
தங்கத்தின் விலை இவ்வாறு கிடுகிடுவென உயர்ந்து, தற்போது ரூ.27 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.