தங்கம் விலையில் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்குநாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3416-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.27,328-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,573-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,584-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500-க்கும் விற்பனையாகிறது.