முடிந்தது ஊரடங்கு.! திறக்கப்பட்ட ஒரு டன் ‘தங்க’ ஹோட்டல்.!
வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் தன் வாடிக்கையாளர்களை கவர ஒரு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது அந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையானது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட குளியலறை, கை கழுவும் இடங்கள் கழிப்பறைகள் என அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு ஜொலி ஜொலிக்கும் வண்ணம் இருக்கின்றன.
இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டலானது ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இது அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் இந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது. இந்த ஹோட்டலில் தங்க முலாம் பூசுவதற்கு மட்டும் சுமார் 1 டன் (1000 கிலோ) தங்கம் பயன்படுத்தப்பட்டது என அந்த ஹோட்டல் முக்கிய நிர்வாகி தகவல் தெரிவித்து அதிரவைத்துள்ளார்.