குத்துச்சண்டை போட்டியில் ஷிவதபாவுக்கு தங்கம் !
பிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா , கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலியுடன் நேற்று முன்தினம் மோதுவதாக இருந்தது.
ஆனால் காயம் காரணமாக ஜாகிர் விலகினார். இதனால் விளையாடாமலே ஷிபதபா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.