வீட்டுக்கு போகனுமா?ஷோவில் வின் பண்ணணுமா? அர்ச்சனாவிடம் தரமான கேள்விகளை எழுப்பும் ஆஜீத்.!
கால் சென்டரில் வேலை செய்யும் அர்ச்சனாவிடம் வீட்டுக்கு போக வேண்டுமா?ஷோவில் வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜீத் எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் நடந்து. வருகிறது.போட்டியாளரில் ஒருவரான ஆஜீத் எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக பலர் குற்றச்சாட்டுகள் எழுப்பினாலும் ,கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக சொல்வார்.கடந்த வாரம் கூட ரியோ பல கேள்விகளை ஆஜீத்திடம் கேட்க ,அனைத்திற்கும் சரியான பதில்களை கூறியிருந்தார்.அதற்கு பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது கால் சென்டரில் ஊழியராக உள்ள அர்ச்சனாவிடம் ஆஜீத் பல கேள்விகளை முன் வைக்கிறார் .அவர் இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளர் என்று அனைவரும் நினைத்தோம். கமல் சார் அவர்களிடம் கூட நான் இன்னும் என்னுடைய நக்கல்களை காட்டவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் வரும்போது உங்களிடம் நிறைய நக்கல்கள் தெரிந்தது. ஆனால் போகப் போக அது குறைந்துவிட்டது போன்று எனக்கு தோன்றுவதாக கூறினார்.
மேலும் அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். நான் பார்த்த வரைக்கும் எல்லாமே சூப்பராக செய்து இருக்கிறீர்கள்.இப்போது என்னுடைய சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா? அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.இதற்கு அர்ச்சனா எந்த மாதிரியான பதிலை கூறுவார் என்று நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
#Day58 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/dcdNro3fTZ
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020