பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான டி கே ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு இருக்கும் போது இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவராக எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து ராகுல் டிராவிட் இரண்டு வாரத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கங்குலி ஒரு பதிவு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாயம் என்ற புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .ராகுல் டிராவிட் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து ஹர்பஜன் சிங் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “இந்திய கிரிக்கெட் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கும் தெரியவில்லை ராகுல் டிராவிட்டை விட சிறந்த நபர் இந்திய கிரிக்கெட்டில் இருக்க முடியாது. இது போன்ற முன்னாள் வீரர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ” என தெரிவித்தார்.
ஏற்கனவே இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக திமுகவை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு திமுக சேர்ந்த அமைச்சர்கள்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டம் கைவிடப்பட்ட காரணத்தால் அதற்கு விழா…