இந்தியாவில் அதிக பட்ச தொகையை Crowd Funding மூலம் சாதித்த யூ-டியூபேர்ஸ்!

Default Image

YOUTUBE இது இணைய உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகையல்ல. பல இளைஞர்கள்  YOUTUBE, TIKTOK போன்றவைகளில் வீடியோக்களை பதிவிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைப்பதனால் பகுதி நேரமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த பலர், இன்று தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முழுநேரமாக அதில் பயணித்து வருகின்றனர்.

யூடியூபில் கோபி, சுதாகர் இவர்களை அறியதாவர்கள் எவருமில்லை. மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் தங்களின் பயணத்தை தொடங்கிய இவர்கள், அரசியல்வாதிகளை தங்கள் நகைச்சுவை திறமையால் விமர்சிப்பதில் கைதேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு  தனியாக பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்த அவர்கள், இன்று 14 லட்சம் பேர் அவர்களை பின்தொடர்கிறார்கள். இந்த சேனலில் இவர்கள் இருவரும் இணைந்து எடுக்கிற அனைத்து வீடியோக்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை இதை சற்று வித்தியாசமாக கையாண்ட கோபி மற்றும் சுதாகர் Crowd fund மூலம் மக்கள் மத்தியில் நிதி திரட்டி படம் எடுக்க திட்டமிட்டனர். இந்த Crowd fund என்பது நீங்கள் இதில் பணம் செலுத்தினால் நீங்களும் ஒரு தயாரிப்பாளர். இதன் மூலம் இப்படத்தில் வரும் லாபத்தில் உங்களுக்கு பங்கு உண்டு என்பதாகும். இதுவரைக்கும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதில் தயாரிப்பாளர்களாக இணைத்துள்ளனர். இதனை பற்றிய அறிவிப்பு வெளியிட்டது முதல் அவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. தற்போது வரை இவர்களுக்கு  இந்த Crowd Fund மூலமாக சுமார் 6 கோடி பெற்றுள்ளனர். இதுவே, இந்தியாவில் அதிகபட்ச தொகையாக பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்