ஆடு வெட்டிய ரசிகர்கள்.. கண்டித்து அறிக்கை வெளியிட்ட ரசிகர் மன்றம்.!
ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது என ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் விதமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 10-ஆம் தேதி வெளியீடபட்டது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் பலர் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போல வீடியோ, மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கட்டணங்களை தெரிவித்து வந்தனர். இப்படி, ஆட்டை கொடூரமான முறையில் பலி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது போன்ற அருவருப்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ‘அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் – லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி இது மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும்
ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.