FIFA World Cup 2018:தனி ஒருவனாக களத்தில் போராடிய ரொனால்டோ!ட்ராவில் முடிந்த போர்ச்சுக்கல் – ஸ்பெயின் ஆட்டம்!

Default Image

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று முன்தினம் ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போர்ச்சுக்கல் – ஸ்பெயின் அணிகள் ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில்  மோதின. ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். பின்னர், 44வது நிமிடத்தில் அவர் மற்றொரு கோலை அடித்ததால் அரங்கமே அதிர்ந்தது. முதல் பாதியில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்ச்சுக்கல் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில், ஸ்பெயின் அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மூன்றாவது கோலை அடித்தார். இறுதியில், மூன்றுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.

முன்னதாக நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்த முதலாவது ஆட்டத்தில் உருகுவே – எகிப்து (ஏ) அணிகள் மோதியது.இந்த போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 கோல் அடித்து உருகுவே அணி வெற்றி பெற்றது.

நேற்று  இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் – மொராக்கோ அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது. 2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்