புவி வெப்பமயமாதலால் கடல் நீர் மட்டம் உயரும்… 77 கோடி பேரின் வாழ்வாதரம் கேள்விக்குறி… ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு…

நாளுக்கு நாள் புவி வெப்பமடைவதால் வரும் 2100ஆம் ஆண்டில் கடல் நீர் மட்டம் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் உயரக் கூடும் என தற்போது அறிவியல் அறிஞர்கள் உலக நாடுகளை எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உள்ள பருவநிலைத் தாக்க ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், புவி வெப்பமடைதல் குறித்து ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில், வரும் 2100ஆம் ஆண்டில் புவி வெப்பநிலை இப்போது உள்ளதை விட மூன்றரை டிகிரி செல்சியல் அதிகரிக்கும் என்றும், இதன்விளைவாகக் கடல் நீர் மட்டம் 130 சென்டிமீட்டர் வரை உயர்ந்துவிடும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 2300ஆம் ஆண்டுகளில் அண்டார்க்டிகா, கிரீன்லாந்து ஆகிய பனிப்பிரதேசங்கள் உருகிக் கடல் மட்டம் 5 மீட்டருக்கு மேல் உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் பத்து சதவீத மக்கள் அதாவது 77 கோடிப் பேர் கடலின் உயர் அலை மட்டத்துக்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வாழ்விடங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.