உலகளவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாராக இருக்கும்.. சினோவாக்.!

Published by
murugan

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று சீனாவை சார்ந்த  சினோவாக் நிறுவனம் அது தான்  உருவாக்கும் கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்கா உட்பட உலகளவில் விநியோகிக்க தயாராக இருக்கும் என்று கூறியது.

சினோவாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  வீடோங் கூறுகையில், கொரோனாவாக் தனது மூன்றாவது மற்றும் இறுதி சுற்று மனித சோதனைகளை முடிக்க உள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், அதை அமெரிக்காவில் விற்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்கும் என்று கூறினார்.

தனக்கு, தனிப்பட்ட முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில், எங்கள் சீனாவிற்கும், வுஹானுக்காகவும் தயாரிக்கப்பட்டது. கொரோனா வைரஸை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், நாங்கள் சரிசெய்தோம் என்று கூறினார்.

அமெரிக்கா,  ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளுக்கு    தடுப்பூசி வழங்குவதே எங்கள் குறிக்கோள். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கடுமையான விதிமுறைகளால்  சீன தடுப்பூசிகளின் விற்பனையைத் தடுத்துள்ளன. அதை மாற்றக்கூடும் என்றார்.

பிரேசில், துருக்கி மற்றும் இந்தோனேசியாவில் தடுப்பூசியின்  மருத்துவ பரிசோதனைகளில் தற்போது 24,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பங்களாதேஷ் மற்றும் சிலியில்  கூடுதல் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago