உலகளவில் குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது.
சீனாவிலுள்ள உகைன் நகரில் துவங்கி தற்பொழுது உலகம் முழுவதிலும் பரவி 1 கோடி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள கொடிய உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 1,32,29,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,74,981 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,691,451 பேர் குணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 195,878 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3,731 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,963,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களை கணக்கிடுகையில் உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நாளொன்றுக்கு தோராயமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால், 1.95 பாதிப்புகளே கடந்த 2 தினங்களாக உள்ளது. மேலும் நேற்று முன்தினம் கணக்கெடுப்பின் படி உயிரிழப்பு 3,956 ஆக இருந்தது. இன்று குறைந்து 3,731 ஆக உள்ளது. உயிரிழப்பு கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 5 ஆயிமாக இருந்தது, தற்பொழுது 3 ஆயிரத்தை நெருக்கியே வருகிறது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து உள்ளது தற்போதைய கணக்கெடுப்பில் தெரிகிறது. இதே போல முழுவதுமாக கொரோனாவின் தாக்கம் குறைய நாம் விழித்திருப்போம், தனித்திருப்போம்.